ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தியேட்டர் வெளியீட்டுக்காக காத்திருந்த இந்த படம் தற்போது வருகிற 18ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த படத்தில் ரகிட ரகிட ரகிட, புச்சி, நேத்து, ஆல ஓல, பரோட்டா மாஸ்டர், கலரே கலர்வாசம், லண்டன் ஸ்ட்ரீட், நான் தான் மாஸ், சுருளி, தீங்கு தக்கா, தேய்பிறை என 11 பாடல்கள் இடம்பெற்றிருந்து. இவற்றில் சில பாடல்கள் நீளம் குறைவான மாண்டேஜ் பாடல்கள்.
படத்தின் ஓடிடி வெளியீட்டுக்காக படத்தில் இடம் பெற்றிருந்த புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:
பொதுவாக இந்த படம் தியேட்டர் அனுபவத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது. அதனால் நிறைய பாடல்கள் படத்தில் சேர்க்கப்பட்டது. படத்திற்கு இடைவேளை இருக்கும் என்பதால் ரசிகர்களின் ரிலாக்சுக்காக சில பாடல்கள் உருவாக்கப்பட்டது. ஓடிடி தளத்தில் இடைவேளை இருக்காது என்பதால் பாடல்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை.
இதனால் புஜ்ஜி, நேத்து பாடல்கள் நீக்கப்பட்டது. வேறு சில சிறிய பாடல்களும் நீக்கப்பட்டது. இந்தப் படம் உலக அளவில் உள்ள மக்களுக்குச் சென்றடைய இருப்பதும் ஒரு காரணம். சில மாதங்கள் கழித்து தொலைக்காட்சியில் திரையிடப்படும்போது அந்தப் பாடல்கள் இடம்பெறும். மற்றபடி ஓடிடி தளத்திற்குகென்று பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.