ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி | 'மனதை திருடி விட்டாய்' நாராயணமூர்த்தி காலமானார் | தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி |
தமிழ் சினிமா இயக்குனர்களில் கவுதம் மேனன் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒரு ஸ்டைலிசான இயக்குனர் என்பதால் அவர் படங்களில் நடிக்க அனைவருமே ஆசைப்படுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட கவுதம் மேனன் தனது டுவிட்டரில், யோகிபாபு நடித்த மண்டேலா படத்தைப் பார்த்தவர் ஒரு சிறந்த காமெடி படம் என்று சொல்லி படக்குழுவுக்கு வாழ்த்து சொல்லியிருந்தார். அதோடு, யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து தான் பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கூறி யோகி பாபுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
இந்த தகவல் யோகிபாபுவின் கவனத்துக்கு சென்றதும் உடனடியாக தனது டுவிட்டரில் நன்றி கவுதம் மேனன் சார் என்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், யோகிபாபுவுடன் இணைந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்ன கவுதம் மேனன், அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாரா? இல்லை தனது படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாரா? என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.