பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' |

போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லிகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் மூலம் ஏதாவது ஒரு முக்கிய விசயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒவ்வொருவருடைய சோஷியல் மீடியா கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில், பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும் அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகள் தான் வந்திருந்தன ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக 10,000 பேர் அந்த புகைப்படத்தை டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் என்ன வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என்று கேட்டுள்ளார் பூரி ஜெகன்நாத்.
இது போன்றவர்களின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.