ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பல சினிமா பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். சில வாட்சப் குழுக்கள், சமூக வலைத்தளங்களில் சிலர் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். படித்தவர்கள் கூட அது பற்றிய குழப்பமான மனநிலையில் உள்ளனர்.
திரையுலகில் தினமும் ஒருவராவது கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்து வருவது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்த நடிகர் வெங்கட் சுபா தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரிதும் தயக்கம் காட்டி உள்ளார். அது பற்றி அவரது 30 ஆண்டு கால நண்பரும், தயாரிப்பாளருமான டி.சிவா கவலையுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் கூட இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மக்கள் அனைவரும் அவரவர் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும், நான் சொல்கிறேன் என்று கூட போட்டுக் கொள்ள வேண்டாம், டாக்டர்களை ஆலோசித்து போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்றிலிருந்து நிச்சயம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என பல டாக்டர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




