உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் | இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் | பிளாஷ்பேக்: சினிமாவை உதறிவிட்டு ராணுவத்திற்கு சென்ற நடிகர் | மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி | ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி |
கொரோனா காலத்தில் பலரும் பல விதங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, சிலரோ அது பற்றிய கவலையெல்லாம் இல்லாமல் இருக்கிறார்கள். சில நடிகைகள் இன்னமும் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை எடுத்து அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மக்களின் வாழ்க்கை நார்மலுக்கு வரும் வரையிலாவது அவற்றைத் தவிர்ப்பதுதான் சரியாக இருக்கும்.
பேஸ்புக், டுவிட்டர் பக்கம் போனால் கூட ஏதோ அரசியல் சர்ச்சை, சினிமா சர்ச்சை என சில நாட்களில் அவை முடிந்துவிடுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கம் போனால்தான் நடிகைகள் சிலரின் பதிவுகள் கன்னா பின்னாவென்று இருக்கிறது.
சிலர் மட்டுமே மிகவும் பொறுப்பாக கொரோனா விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பதிவுகளைப் பதிவிடுகிறார்கள். சிலர் வழக்கம் போல கிளாமர் போட்டோக்களைப் பதிவிடுகிறார்கள். பிக் பாஸ் புகழ் ஷிவானி, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே அவரது கிளாமர் புகைப்படங்களால் பிரபலமானார். இப்போதும் அதைத் தொடரும் ஷிவானி, இப்போது 'கெட்ட' ஆட்டம் போடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“லாக்டவுன்ல ரொம்ப போர் அடிக்குது, சரி நாமளும் ஒரு ரீல்ஸ போடுவோம்,”னு போட்டிருக்காராம்.