''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
'கயல்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சந்திரனும், பிரபல டிவி தொகுப்பாளரான அஞ்சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று வயது ஆண் குழந்தையும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமான பாலோயர்கள் கொண்டவர் அஞ்சனா. டிவி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான ஒருவர். அவருக்கு ஒரு நபர் தொலைபேசி வழியே தொடர்ந்து அநாகரிகமாக தொல்லை தருவதாக சந்திரனும், அஞ்சனாவும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக சந்திரனும், அஞ்சனாவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“சில வருடங்களுக்கு முன்பு இதே போல கடினமான நேரத்தில் தொல்லை இருந்தது, பின்னர் சைபர் கிரைம் மூலமாக பிரச்சினை தீர்ந்தது. அது போலவே இப்போதும் தொல்லைகள். தனிப்பட்ட மெசேஜ்கள் நிறைய வருகின்றன. அவற்றை நான் பிளாக் செய்துள்ளேன். ஆனால், இது இன்னும் அப்படியே இருந்து பயப்பட வைக்கிறது,” என அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பலர் பொய்யான கணக்குகள் மூலம் பிரபலங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பது மனநோயாக உள்ளது. போலியான முகத்தைக் காட்டாத தளங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அவற்றை செய்ய வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்து பலரது விருப்பமாக உள்ளது. அப்படி போலியான கணக்குகள் தடை செய்யப்பட்டால் டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் நடக்கும் அருவெறுக்கத்தக்க விஷயங்கள் நிறையவே குறையும்.