பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கடந்த சில தினங்களாகவே சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்திற்கு பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் தனது டுவிட்டரில், ‛‛இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் இன்னும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் எனது நண்பரும், அமைச்சருமான அன்பில் பொய்யா மொழியிடம் இதற்கு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க சொல்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், சினிமாத்துறையை சார்ந்தவரான நீங்கள் அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சினிமாத்துறையில் உள்ள பெண்கள் உங்களிடம் உதவியை நாடியபோது நீங்கள் உங்கள் ஹீரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும். உங்களைப் போன்றோரின் அணுகுமுறைகளைப் பார்த்துதான் பெண்கள் உங்களை கண்டு ஓடுகிறார்கள். முதலில் யதார்த்தத்தை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.