கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

சினிமாவில் எவ்வளவு வளர்ந்தாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் ஒரு சிலர் தான். ஓரிரு படங்களில் நடித்த உடனே தனி மேனேஜர், பிஆர்ஓ என வைத்துக் கொண்டு தாம் தூம் என அட்டகாசம் செய்யும் நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.
'சிறைவாசி' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த மகாபாரதப் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் பெயரைக் கொண்ட நடிகர் ஓரிரு படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரைத் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று தான் பதில் வருகிறதாம்.
'ஆசிரியர்' படத்தில் நடித்த பிறகும் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்த பின்னும் இப்போதே தன்னை டாப் நடிகர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டுள்ளாராம். இப்படியான பலரை தமிழ் சினிமா உலகம் பார்த்துவிட்டது. இப்படி ஆட்டம் போட்ட பலர் கடைசியில் சினிமாவைவிட்டே அப்பால் போய்விட்டார்கள் என்று அந்த நடிகரை நினைத்து சிலர் வருத்தப்படுகிறார்கள். புரிந்து கொள்வாரா நடிகர் ?.