திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் | லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்த ஆர்யா | பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு | 'ஜகமே தந்திரம்' பற்றி 'கிரே மேன்' இயக்குனர்கள் கருத்து | ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா |
முன்னணியில் இருக்கும் அந்த நடிகர் கடன் சுமையில் இருக்கிறாராம். தான் நடித்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டது. சம்பளத்தை விட்டுக் கொடுத்தது என எல்லாம் சேர்ந்து பெரும் தொகை கடனாக நிற்கிறதாம். கொரோனா காலம் வராமல் போயிருந்தால் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சமாளித்திருப்பார். இப்போது படங்கள் முடங்கி கிடக்கிறது, கடன் வளர்ந்து நிற்கிறது.
அவரின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஒரு சேனல் நிறுவனம். எங்கள் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து 5 படங்கள் நடித்துக் கொடுங்கள். ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வீதம் 75 கோடியை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று டீல் பேசியதாம். நடிகரும் தற்போதைய சூழலுக்கு இது தான் வழி என ஒப்புக்கொண்டாராம் . படத்தின் கதை, இயக்குனர், ஹீரோயின் என தயாரிப்பு தரப்பு தான் முடிவு செய்ய பேகிறதாம்.