'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் 'கோல்ட் கேஸ்' (cold case) இந்த படத்தில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரித்விராஜ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நடித்துள்ளார் அருவி புகழ் அதிதி பாலன். ஒளிப்பதிவாளரான தனு பாலக் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்தப்படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் நல்ல விலை கொடுத்து கைப்பற்றி உள்ளது.. அத்சீமயம் தற்போதைய சூழலில் பெரிய படங்கள் கூட நேரடியாக ஒடிடியில் ரிலீஸாகி வந்தாலும், தற்போதைய நிலைமை சரியாகி, தியேட்டர்களில் இந்தப்படம் வெளியான பின்னரே ஒடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம்.