அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து 2019ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மான்ஸ்டர்'. இப்படத்தைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேற்று 'மான்ஸ்டர்' படத்தின் போட்டோ ஷுட் என பிரியா பவானி சங்கர் கையில் துடைப்பத்தை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டது.
அப்புகைப்படத்தைப் பார்த்த பிரியா பவானி சங்கர், “வேறு எதுவும் கிடைக்கவில்லையா ?,” எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக 'மணப்பெண்' கோலத்தில் பிரியா இருக்கும் மற்றொரு புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கடுப்பான பிரியா, “ஜென்டில்மேன் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், நெல்சன் இந்தப் புகைப்படம் பற்றி நேத்துதான் நாம் பேசினோம். இது உங்கள் ஐடியா என்றால் நான் பழி வாங்கத் தயாராக இருக்கிறேன்,” என இயக்குனரிடம் கோபப்பட்டார்.
பதிலுக்கு இயக்குனர் நெல்சன், “இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை விட முந்தைய போட்டோ நன்றாக இருந்தது. அந்தப் படத்தின் கையில் இருக்கும் பொருள் காதலின் சின்னம்,” எனக் கூறியிருந்தார். அதன்பின் பிரியாவுடன், எஸ்ஜே சூர்யாவும் கையில் துடைப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் நெல்சன்.
அதைப் பார்த்து நொந்து போன எஸ்.ஜே.சூர்யா, 'இந்த கதை இப்பக்குள்ள முடியாதா,” என பதிவிட்டார். ஒரு வழியாக அந்தப் புகைப்படத்துடன் சமாதானம் அடைந்தார் பிரியா.