'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'புலிமுருகன்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் வைசாக்கும் கதாசிரியர் உதயகிருஷ்ணாவும் மீண்டும் இணைந்துள்ள படம் மான்ஸ்டர். இந்த படத்தில் சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மோகன்லால். ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக மோகன்லாலின் படங்கள் ஓடிடியிலும், தியேட்டரிலும் மாறிமாறி வெளியாகி வருகின்றன. தியேட்டரில் வெளியான அவரது படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. அதேசமயம் ஓடிடியில் வெளியான அவரது படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகின.
அதனால் மான்ஸ்டர் படத்தையும் ஓடிடியில் வெளியிடலாம் என்கிற பேச்சு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் மான்ஸ்டர் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும், ஓடிடியில் வெளியிட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததாலும் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் அந்த சமயத்தில்தான் பொன்னியின் செல்வன், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இதனால் தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி தீபாவளி அன்று மான்ஸ்டர் படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். இதற்காக தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாக மலையாள திரையுலக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது..