'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. அதை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த பின்பு அனைவராலும் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் அந்தப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தொடர்ந்து மலையாளத்திலும் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இனி உத்தரம்'. இந்த படத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை சுதீஷ் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது. முதல் காட்சியிலேயே காட்டுக்குள் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் அபர்ணா பாலமுரளி, தான் ஒருவரை கொன்று விட்டதாக கூறி போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைக்கிறார்.
டிரைலரில் வெளியான காட்சிகளின்படி அவர் தனது பாய்பிரண்டை கொன்றுவிட்டதாக புரிந்துகொள்ள முடிகிறது. எதற்காக அவர் கொலை செய்தார் என்பதை போலீஸ் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் விசாரிப்பது போன்றும் அரசியல் அளவில் அபர்ணாவின் இந்த வாக்குமூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த டிரைலர் விறுவிறுப்பாக தயாராகி உள்ளது.