அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்டிஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என டுவீட் செய்துள்ளார். “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. கோவிட் 19 தொற்றை நாம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நல்ல பாசிட்டிவ் மனநிலையுடன், கவனத்துடன் அதை வெற்றி கொள்ள முடியும். இந்த போராட்டத்தில் உங்கள் மன வலிமை தான் சக்தி வாய்ந்தது, வலிமையாக இருங்கள், அச்சப்பட வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜுனியர் என்டிஆர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.