ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கடந்த 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாபராதம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நிதீமன்றத்தில் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கை வள்ளியூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இனி இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிகழாது என்று உறுதி அளிக்கிறோம்" என்று மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கமல்ஹாசன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.