ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சென்னை : தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் சூழலில் இன்று(மே 6) ஒரேநாளில் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று பல திரைப்பிரபலங்கள் அதிலும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக மறைந்து வருகின்றனர். கடந்த மார்ச் 14ல் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அதன்பின் நகைச்சுவை நடிகரும், பசுமை இந்தியா ஆர்வலருமான நடிகர் விவேக் ஏப்., 17ல் மறைந்தார். இவர்கள் மறைந்த சோகம் தீருவதற்குள் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஏப்.,30 அன்று கொரோனா தொற்றோடு, மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் நேற்று 500 படங்களுக்கு மேல் நடித்தவரும், என்னடி முனியம்மா உள்ளிட்ட பாடல்களை பாடிய நாட்டுப்புற பாடகருமான டி.கே.எஸ்.நடராஜன் சென்னையில் வயது மூப்பால் காலமானார். இப்படி அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து தமிழ் சினிமா உலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று(மே 6) ஒரே நாளில் மூன்று பிரபலங்கள் மறைந்தது திரையுலகினர் இடையே இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ‛ஆட்டோகிராப்' பட புகழ் பாடகரும், மாற்றுத்திறனாளியுமான கோமகன் ஆகியோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தனர். அதேப்போன்று 1980ல் ஒரு தலை ராகம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரை சினிமாவுக்கு தந்த இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிமும் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இப்படி திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.