மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சமீபகாலமாக முன்னணி இயக்குனர், ஹீரோக்கள் இடம் பெற்ற படங்களுக்கே மிகப்பெரிய அளவில் புரமோஷன் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள லப்பர் பந்து படம் எந்தவித பரப்பும் இல்லாமல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 20ம் தேதி திரைக்கு வந்தது. குறிப்பாக இப்படியொரு படம் திரைக்கு வந்தது ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாசிட்டிவ்வான கருத்துக்களை பதிவிட்டதை அடுத்து தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படம் ஐந்து நாட்களில் ஏழு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அதோடு இந்த படத்தின் பிக்கப் காரணமாக தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் விஜய்யின் கோட் படம் ஓடிக் கொண்டிருந்த பல தியேட்டர்களில் தற்போது லப்பர் பந்து திரையிடப்பட்டுள்ளது.




