நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. அதைத்தொடர்ந்து எதிர்பாராத பரிசாக விஜய்யுடன் கோட் படத்தில் ஜோடியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்த படத்தின் மூலம் பரவலாக ரசிகர்களை சென்றடைந்த மீனாட்சி சவுத்ரிக்கு துல்கர் சல்மானுடன் ஜோடியாக நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்துவிட்டது. இந்த நிலையில் பல பெரிய ஹீரோக்களின் பார்வை இவரை நோக்கி தற்போது திரும்பி உள்ளது. அந்த வகையில் தற்போது பிஸியான நடிகையாக மாறியுள்ளார் மீனாட்சி சவுத்ரி.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகரும், நாகசைதன்யாவின் உறவினருமான சுஷாந்த் அனுமோலு என்பவருடன் மீனாட்சி சவுத்ரி காதலில் விழுந்துள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் ஒரு தகவல் சமீப நாட்களாக சோசியல் மீடியாவின் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2021ல் வெளியான இச்சாட்ட வாகனமுலு நிலபரடு என்கிற படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தது தான்.
இந்த நிலையில் நாளை (நவ-22) தெலுங்கில் தான் ஹீரோயினாக நடித்து வெளியாக இருக்கும் மெக்கானிக் ராக்கி என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார் மீனாட்சி சவுத்ரி. அப்போது பேசிய அவர் இந்த காதல் கிசுகிசு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாகவும் பேசினார்.
அவர் பேசும்போது, “எப்படித்தான் இது போன்ற செய்திகள் பரவுகிறது என்றே தெரியவில்லை. ஒருமுறை நான் சலார் படத்தில் நடிப்பதாக சொன்னார்கள். இன்னொரு நாள் நான் விஸ்வம்பரா படத்தில் நடிப்பதாக சொன்னார்கள். அந்த வகையில் இதுவும் ஒரு வதந்தி தான். நான் இப்போதைக்கு திருமணம் செய்ய போவதில்லை. நான் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன். ஆனால் யாருடனும் மிங்கிளாக தயாராக இல்லை” என்று ரைமிங்காக பேசி இந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.