சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி தரணீஸ்வரிக்கும், தனுஷ் நடிக்கும் 'இட்லிகடை' உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளரான ஆகாஷிற்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆகாஷ் தயாரிப்பாளர் என்பதால் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நிகழ்ச்சிக்கு நயன்தாராவும், தனுசும் வந்தனர். இருவரும் சற்று இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த ஷோபாக்களில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. நயன்தாரா கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். இருவர் முகத்திலும் சின்னதாக கோபமும், வெறுப்பும் இருந்தது. பின்னர் இருவரும் தனித்தனியாக சென்று மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
நயன்தாராவின் ஆவணப்படம் தொடர்பாக இருவருக்கும் சமீப நாட்களாக மோதல் இருந்து வருவதும், நயன்தரா, தனுஷை கடுமையமாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்தில் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், அட்லீ, அனிருத், லைகா தமிழ்குமரன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, அருள்நிதி, ஹரிஷ் கல்யாண், மஹத், தரண்குமார், தமிழரசன் பச்சமுத்து, கலையரசன், ரவிகுமார், பாடலாசிரியர் விவேக், பாலசரவணன், தேஜு அஸ்வினி, கயாடு லோகர், சம்யுக்தா விஸ்வநாதன், பிரேம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.