'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜாலியோ ஜிம்கானா' . சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் மற்றும் நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா பிணமாக நடித்துள்ளார்.
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் சக்தி சிதம்பரம், பேசியதாவது: கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம்.
ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. டெட்பாடியாக பிரபுதேவா நடிக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒன்றரை நாளில் நடக்கும் கதையில் பிரபுதேவா 110 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் சார் பிணமாக நடித்தது ஒரு போர்ஷன்தான். ஆனால் பிரபுதேவா முழு படத்திலும் அப்படி நடித்திருக்கிறார்” என்றார்.
இந்தப்படம் இன்று(நவ., 22) திரைக்கு வந்துள்ளது.