ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடப்படுகிறது. இதோடு தற்போது 'ஆசான்' என்கிற குறும்படமும் திரையிடப்படுகிறது.
இந்த படத்தை சமீபத்தில் வெளியாகி விருதுகளை பெற்ற 'கட்டில்' படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபு இயக்கி உள்ளார். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் வனிதா தயாரித்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்
படத்தைப் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறும்போது “உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட ஆளுமைகள் இந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத் தவறை உணரச் செய்வதின் மூலம் அவர்கள் வாழ்வை, ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.