ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். தற்போது இந்த படம் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது.
படத்தில் நடிப்பது குறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆன்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம். அதனால் நான் நிறைய ரீமேக் படங்களில் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்தபோது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன்.
இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. க.பெ ரண்சிங்கம் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுமியை சந்தித்தேன். அவளுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த படமும் அதை பற்றித்தான் பேசுகிறது.
இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.




