மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கோடைக் காலம் ஆரம்பமாகிவிட்டது. அடிக்கும் வெயிலில் வீட்டை விட்டு வெளியில் செல்ல மக்கள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களும் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கோடை காலத்தில் நமது உடல்நலமும் பாதிக்கப்படும். அதைச் சமாளிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு டிப்ஸ் தந்துள்ளார்.
“இந்த கோடை வெப்பத்தை எப்படி சமாளிப்பது என யோசித்தேன். பார்லி தண்ணீர்தான் உங்களைக் காப்பாற்ற வரும். எனது நியூட்ரிஷனிஸ்ட் தான் இந்த கூல்டிரிங்கை பரிந்துரை செய்தார். இது கோடை கால துயரங்களில் இருந்து உங்களைக் காக்கும். வீக்கம், முகப்பரு, ஜீரணப் பிரச்சனை ஆகியவற்றை இது சமாளிக்கும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
பார்லி தண்ணீரை எப்படி செய்வது என்பது குறித்து ரகுல் எந்த வீடியோவும் பதிவிடவில்லை. கூகுள் செய்யுங்கள், தெரிந்து கொள்ளுங்கள்.