Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்காரர்கள் முடிவில் மாற்றம் : அரசு வழியில் நடக்க முடிவு

20 ஏப், 2021 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Theatre-owners-change-their-decision

கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகளையும், ஞாயிற்றுக் கிழமை காட்சிகளையும் நடத்த முடியாது.

இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், புதிய ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் பாதிக்கப்படும். எனவே, தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளோம் என்றும், அது குறித்து விவகாதிக்க உள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

அதன்படி இன்று ஜும் மீட்டிங்கை தியேட்டர்காரர்கள் நடத்தி உள்ளார்கள். கூட்டத்தின் முடிவில் தியேட்டர்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார்களாம். இரு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களை மூடுவோம் என்றவர்கள் இன்று அவர்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இருந்தாலும் நேற்று முதலே தியேட்டர்களுக்கு மக்கள் வருகை மிகவும் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு பகல் நேரங்களில் வருவதைக் கூட நாளை முதல் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய புதிய படங்கள் ஏற்கெனவே அவர்களது வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ள நிலையில், இந்த வாரம் சிறிய படங்கள் வெளிவந்தால் அவற்றைப் பார்க்க மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம் தான்.

மீண்டும் கடந்த வருட நவம்பர் மாத சூழ்நிலையே தற்போது திரும்பி வரும் என தியேட்டர்காரர்கள் மத்தியில் ஒரு அச்சம் எழுந்துள்ளதும் உண்மை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கோடையை சமாளிக்க ரகுல் ப்ரீத் தரும் டிப்ஸ்கோடையை சமாளிக்க ரகுல் ப்ரீத் தரும் ... இஸ்லாமியர்களை பற்றி பேசும் படம் இஸ்லாமியர்களை பற்றி பேசும் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

karthi -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2021 - 15:20 Report Abuse
karthi Renting movies or Watching them through OTT has been proven to be more economical choice than going to theatre in these times. Almost every family has a 29 inch or bigger TV. Small productions will also get the same platform and equal recognition.For a bigger screen i have to pay astronomical ticket prices, booking charges, parking charges, outrageous food prices, 18 gst.
Rate this:
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
20 ஏப், 2021 - 14:16 Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN நாட்டில் வாழ்வாதாரமே சீர்குலையும் நிலையில் சினிமா ஒரு முக்கியமா? சினிமா மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பங்கு கதாநாயகன் கதாநாயகி டைரக்டர் தாயாரிப்பாளருக்கு போய் விடும் கிட்டத்தட்ட 60% மீதம் முள்ள 40 %ல் 20% பைனான்ஸ்தாரருக்கு போய்விடும் மீதமுள்ள 20% மற்றவர்களுக்கு செல்லும். ஆனால் ஒரு தொழிலகத்தில் அப்படி அல்ல. வருமானத்தில் 10 முதல் 15% தொழிலாளர்களுக்கும் 20 முதல் 25% முதலீட்டுக்கும் வட்டி கடன் போன்றவைகளுக்கு 10 முதல் 15% பராமரிப்பு 10 முதல் 15 % தொழிலாளர்கள் நலன் ( பிஎப் இஎஸ்ஜ மருத்துவ சிலவு உணவு) மீதமுள்ள 30 முதல் 35 % கம்பெனி பங்கு தாரர்கள் டைரக்டர்கள் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு செல்லும். பணம் பலவிதமாக பிரிந்து பலருக்கு நன்மை கொடுக்கும். சினிமா துறையில் இருக்கும் தொழிலாளர்கள் தொகை குறைவே. அவர்களின் வாழ்வாதாரம் கெடாமல் இருக்க அவர்களை கோரோணா தடுப்பு பணியில் ஈடுபடுத்தலாம். தொழிலகங்கள் கெடாமல் பார்த்துக்கொண்டால் பொருளாதாரம் பெருகும். சினிமா பற்றி கவலைபட்டால் பொருளாதாரம் பெருகாது. தொழிலகங்கள் கெடாமல் பார்த்து கொள்ளவது நல்லது. சினிமா பற்றி சிறிது காலம் யாரும் கவலைப்பட வேண்டாம்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
21 ஏப், 2021 - 10:59Report Abuse
தமிழ்வேள்ஜி நீங்கள் சொல்வது நூறுவீதம் உண்மை ..ஆனால் கூத்தாடி அடிமைகளாக உள்ள இந்த மாநிலத்தில் நல்ல எண்ணங்கள் எதுவும் எடுபடாது. கூத்து பார்க்கவில்லை என்றால் தூக்கில் தொங்கும் ஆட்களை, கூத்தாடிக்கு கோவில்கட்டி தன்னை பெற்றதாய் தகப்பனை தெருவில் விடும் வெட்டிப்பயல்களை பெரும்பான்மை குடிமக்களாக கொண்டிருக்கிறோமே ..என்ன செய்ய ? ஒரே ஒரு என் ட்டி ஆர் மட்டுமே சினிமாவிலிருந்து ஆந்திராவை ஆண்டார் பிறகு தெலுங்கன் விழித்துக்கொண்டான் ..ஆனால் தமிழகம் , மறைமுக கூத்தாடிகள் அண்ணா கட்டுமரம் முதல் நேரடி கூத்தாடிகள் எம் ஜி ஆர் ஜெயலலிதா வரை இன்று மற்றும் அரசியல் ஆசையுடைய அனைத்து கூத்தாடிகளை தலையில் தூக்கிவைத்து அல்லவா டான்ஸ் ஆடுகிறது? இந்த மாநிலம் எல்லாம் உருப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in