ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? |
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருந்தவன். அரசியல் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். அப்படிப்பட்ட நான் எந்த சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். நான் மறுபடியும் நடிக்க சென்று விடுவேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சட்டசபை உறுப்பினராக இருந்து கொண்டு நடித்தார். அது அவருக்கான அரசியல் போராக இருந்தது. இனி நான் நடிக்கும் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி அதனை மக்களுக்காக செலவு செய்வேன். சினிமா எனக்கு தொழில், அது அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தற்போது ஒத்துக் கொண்டிருக்கிற படங்களில் மட்டும் நடித்து கொடுப்பேன் என்றார்.