'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில். பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்தார். தற்போது வெளியான த்ரிஷயம்-2வில் நன்கு வளர்ந்த இளம்பெண்ணாக காட்சியளிக்கும் இவர், கதாநாயகியாகவும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியா பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
சமீபத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட தனது இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் எஸ்தர் அனில். அதுபற்றி அவர் கூறும்போது, இதில் ஒன்று ஹோட்டல் அறையில் உள்ள செயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. என் சருமம் எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது பார்த்தீர்களா..? இன்னொரு புகைப்படம் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் எல்லாம் தெரிகின்றன. அதனால் சோஷியல் மீடியாக்களில் பலர் வெளியிடும் படங்களை பார்த்து அப்படியே உண்மை என நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார் எஸ்தர் அனில்.