விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் முன்னணி நடிகை ஆனார் ரெஜினா கெசண்ட்ரா. அதன்பிறகு மீண்டும் தமிழுக்கு வந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா உள்பட பல படங்களில் நடித்தார்.
தற்போது பார்ட்டி, கள்ளபார்ட், கசட தபற, சூர்ப்பனகை படங்களில் நடித்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு தற்போது துடுப்பு படகு நீர் சறுக்கு விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஐதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அவர் அந்த மையத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றிருக்கிறார்.
இதன் வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள ரெஜினா. "முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி". என்று தெரிவித்திருக்கிறார். ரெஜினாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.