நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை | தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி | தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் | மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமா | நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் |
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான வானதி சீன்வாசனுக்கும் கமலுக்குமிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கெளதமி, நமீதா என பல திரையுலகினர் பிரச்சாரம் செய்து வருவதைப் போன்று கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளான நடிகை சுகாசினி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தற்போது கமலின் இளைய மகளும் நடிகையுமான அக்சராஹாசனும் களமிறங்கியிருக்கிறார்.
தேர்தல் களத்தில் கமல் மற்றும் டார்ச்லைட்டுடன் தான் நின்றும் புகைப் படங்களை இணையத்தில வெளியிட்டுள்ள அக்சராஹாசன், என் அப்பா ஒரு உண்மையான போராளி. தான் விரும்பி யதை செய்வதற்காக எல்லா வகையான வலிகளை கடந்து போராடுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.