ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த படம் 'மாஸ்டர்'. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகின. அவற்றில் குறிப்பாக 'வாத்தி கம்மிங்' என்ற பாடலின் இசையும், நடனமும் அதை மொழி வித்தியாசம் இல்லாமல் பலரும் ரசிக்கும்படியாக அமைந்தது.
அப்பாடல் தற்போது யு டியுபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த பாடல்களில், 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலின் லிரிக் வீடியோ, 'பிகில்' படத்தின் 'வெறித்தனம்', 'தெறி' படத்தின் 'என் ஜீவன்' ஆகியவை 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தன.
இப்போது 'வாத்தி கம்மிங்' பாடலின் வீடியோவும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் இந்த சாதனையை இப்பாடல் 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. இப்பாடலின் லிரிக் மற்றும் வீடியோ இரண்டும் சேர்த்தால் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழ் சினிமா பாடல்களில் 100 மில்லியன் கிளப்பில் விஜய்யின் பாடல்கள்தான் அதிக முறை இடம் பிடித்துள்ளன.