புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்துள்ள 'காடன்' படம் தமிழ், தெலுங்கில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது தன்னுடைய திருமணத்தைப் பற்றி விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். அவருக்கும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுக்கும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறது. இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.
“படப்பிடிப்பிலும் ஒரு படம் முடிவடையும் வரையிலும் ஜுவாலா கட்டா எனக்கு மிகப் பெரும் ஆதரவாக இருக்கிறார். விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். திருமணத் தேதி பற்றி விரைவில் அறிவிக்கிறோம், சீக்கிரமே நான் தெலுங்கு மாப்பிள்ளை ஆகப் போகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இயக்குனரும், நடிகருமான நட்ராஜ் மகள் ரஜினிக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2018ல் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் அடுத்த மாதம் நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.