23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இதுவே தாய் சங்கமாக மதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சங்கத்தில் நடந்த பல குழப்பங்கள் காரணமாக தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்து சங்கத்தை நடத்தியது. இந்த நேரத்தில் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். டி.ராஜேந்தர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். தற்போது இதன் தலைவராக உஷா டி.ராஜேந்தர் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்புக்கு வந்தனர். தற்போது சங்கத்தின் சார்பில் மற்ற இரண்டு சங்கங்கள் மீதும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்க செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்கள் புதிதாக தொடங்கபட்டுள்ளது. இந்த சங்கங்களால் தேவையில்லாமல் பெயர் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு சங்கத்தின் பெயர் போன்றே இன்னொரு சங்கம் தொடங்கப்படக்கூடாது என்ற விதிமுறை இருப்பதால் மேற்கண்ட இரண்டு சங்கங்களின் பதிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக வருகிற ஏப்ரல் 8ந் தேதிக்கு இரு சங்கங்களும் பதில் அனுப்ப நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.