லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
ரஜினியை வைத்து 2.0 படத்தை இயக்கிய ஷங்கர், அதையடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தையும் 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தயாரித்து வருகிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லாக்டவுன் போன்ற காரணங்களால் சில தடைகளை சந்தித்து வந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.
தற்போது கமல் தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டதால் மீண்டும் இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியவில்லை. இதன்காரணமாக, தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் புதிய படவேலைகளை ஷங்கர் தொடங்கிவிட்டார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ராம்சரண் படத்தை அடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து இன்னொரு படத்தையும் ஷங்கர் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2005ல் விக்ரமை வைத்து தான் இயக்கிய அந்நியன் படத்தைதான் ஹிந்தியில் ரீமேக் செய்கிறாராம் ஷங்கர். ராம்சரண் நடிக்கும் படவேலைகள் முடிந்ததும் ரன்வீர்சிங் நடிக்கும் படம் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாம்.