‛கல்கி 2898 ஏடி' - சாட்டிலைட் டிவி உரிமை விற்பனையில் தடுமாற்றம்? | 100 மில்லியனைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' பாடல் | பிக்பாஸில் தர்ஷிகா! பொன்னி சீரியலுக்கு குட்பை தானா? | வரலாற்றுப் படம் இயக்க தயாராகும் இயக்குனர் பிரேம்குமார் | கிராமி விருதுகளுக்காக அனுப்பப்பட்ட மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் | தேவரா இயக்குனரை ஒரு மாதத்திற்கு வெளியூருக்கு அனுப்பும் ஜூனியர் என்டிஆர் | 1400 கி.மீட்டரை 12 மணி நேரத்தில் கடந்த 'எம்புரான்' படக்குழு ; பிரித்விராஜ் பாராட்டு | மெய்யழகன் படத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் பி.சி ஸ்ரீராம் ; தயாரிப்பாளர் புது தகவல் | ‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! |
கடந்த 2005ல் ஷங்கர், விக்ரம் கூட்டணியில் வெளியான படம் அந்நியன். மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தை ஷங்கர் துவங்கியபோது சில காரணங்களால் அந்த படம் தடைபட்டது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை அவர் இயக்கப் போகிறார் என்றும் அதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. அதன் பிறகு எதிர்பாராத விதமாக ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை துவங்கிய ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பையும் துவங்கி பிஸியாகி விட்டார். இதனால் அந்நியன் ரீமேக் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ஹிந்தியிலும் வெளியானது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விக்ரமிடம் அந்நியன் படத்தின் ரீமேக் குறித்தும் கேட்கப்பட்டது. இது குறித்து பதில் அளித்த விக்ரம், “இது பற்றி நீங்கள் இயக்குனர் ஷங்கரிடம் தான் கேட்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் என்னை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்க வேண்டும்” என்று தன் மனதில் மறைந்திருந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
அது மட்டுமல்ல இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு ரன்வீர் சிங் தகுதியான நபர் தான் என்றும் அப்படி அவர் நடித்திருந்தால் என்னைவிட இந்த படத்திற்கு சில விஷயங்களை சிறப்பாக சேர்த்திருப்பார் என்றும் அதை பார்ப்பதற்கு ஆவலாக இருந்தேன் என்றும் கூறியுள்ளார் விக்ரம்.