'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்த படத்தில் இருந்து மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த பாடலில் பயன்படுத்தி இருந்தனர்.
வேட்டையன் படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறுகையில், ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, சூப்பர் நடிகர். ஆனபோதிலும் தன்னை ஒரு நல்ல நடிகர் என்று அவர் எங்கேயும் சொன்னதில்லை. அவருக்குள் ஒரு பிரமாதமான நடிகர் இருக்கிறார். இயக்குனரை அவர் மதிக்கும் விதம் மிக அருமை. இயக்குனர் எது கேட்டாலும் செய்வார். அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இயக்குனர் சொன்னதற்காக யோசிக்காமல் நடித்து விடுவார்.
இதனால்தான் அவர் எப்போதுமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி இயக்குனர்களுக்கும் பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். குறிப்பாக இரவில் தான் படப்பிடிப்பு நடத்தப்போகிறேன் என்று சொன்னால் எந்த மறுப்பும் சொல்லாமல், சொன்னபடி இரவு 2 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்பார். இன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு சரியாக சொன்ன நேரத்தில் வந்து நிற்பார்களா என்பது சந்தேகம்தான். அதோடு ஒரு நாள் கூட அவர் படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வந்ததில்லை. தொழிலை நேசித்து வருவதினால்தான் அவர் இத்தனை காலமும் சினிமாவில் நிலைத்திருக்கிறார் என்று ரஜினி குறித்து கூறியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.