டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சேகர் கம்முலா இயக்கத்தில் பவன் இசையமைப்பில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'லவ் ஸ்டோரி'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டுப்புறப் பாடல் ஒன்றை சமீபத்தில் யு டியூபில் வெளியிட்டனர். வெளியான 14 நாட்களுக்குள்ளாகவே அப்பாடல் 50 மில்லியன், அதாவது 5 கோடி பார்வைகளைப் பெற்று தெலுங்குத் திரையுலகில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் 18 நாட்களில் 50 மில்லியன் பெற்ற சாதனையை 'சாரங்க தரியா' பாடல் முறியடித்துள்ளது.
இந்தப் பாடல் குறித்து எழுந்த சர்ச்சைக்கும் படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கோமலி என்ற நாட்டுப்புறப் பாடகிதான் இப்பாடலை சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பாடி பிரபலப்படுத்தினார். படத்திற்காக மங்கிலி என்பவர் பாடியுள்ளார். இருந்தாலும் படத்தின் இசை வெளியீட்டின் போது மேடையில் இப்பாடலைப் பாட கோமலிக்கு சேகர் கம்முலா வாய்ப்பளித்துள்ளார்.
சாய் பல்லவி நடித்த பாடல்களில் அவருடைய நடனத்திற்காகவே பாடல்கள் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெறுகின்றன. இதற்கு முன் தமிழில் 'ரவுடி பேபி' பாடல், தெலுங்கில், 'வச்சிந்தே' ஆகிய பாடல்கள் முறையே 1100 மில்லியன் 290 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அடுத்து 'சாரங்க தரியா' பாடலின் முழு வீடியோ வெளியானால் அதுவும் மேலும் சாதனைகளைப் படைக்க வாய்ப்பிருக்கிறது.




