பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி ஆற்றில் நாகசைதன்யா நடிக்கும் 'லவ் ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாகசைதன்யா படகு சவாரி செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. .
அப்போது ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு நாகசைதன்யாவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தனர். அதில் தீவிர ரசிகர் ஒருவர், வெகு அருகில் சென்று நாகசைதன்யாவை பார்க்க வேண்டும் என்பதற்காக பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து நாகசைதன்யாவின் படகை நோக்கி நீந்தி செல்லும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த ரசிகரை தனது படகில் ஏற்றிய நாகசைதன்யா, அவரை தனது கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவருக்கு அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார் நாகசைதன்யா.