சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? | ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர் | தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்! | ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது! | 'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா? | நடிகைக்கு ஷாக் கொடுத்த டிராகன் நடிகர் | கணவர் நடிகருடன் மல்லுக்கு நிற்கும் மனைவி நடிகை | ரஜினி வசனமும் நானும்! கண்ணா ரவியின் மகிழ்ச்சி | பிளாஷ்பேக்: அரசியல் நய்யாண்டி திரைப்படங்களின் ஆணிவேர் “முகமது பின் துக்ளக்” |

சமீபத்தில் சோஷியல் மீடியாவில் துல்கர் சல்மான் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஆழப்புழா பகுதியில் படப்பிடிப்புக்காக சென்ற துல்கர் சல்மான், பைபாஸ் ரோட்டில், சாலை விதிகளை மீறி, வாகனங்கள் வரும் எதிர் திசையில் தனது காரை ஓட்டிச்சென்று சிக்னலில் நிறுத்தியுள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர், காரை பின்னால் எடுத்துச்சென்று, வரிசையில் வருமாறு துல்கரிடம் கூறியுள்ளார்,
உடனே சினிமாவில் வருவது போல, படு ஸ்பீடாக காரை ரிவர்ஸ் எடுத்து, கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று, மீண்டும் சரியான திசையில் பறந்துள்ளார் துல்கர் சல்மான். அந்த பகுதியில் டூவீலரில் பயணித்த நபர் ஒருவர் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காவலர் சொன்னதை துல்கர் சல்மான் ஏற்றுக்கொண்டாலும், அவர் தெரிந்தே சாலை விதிகளை மீறியது தவறு என்று சிலர் துல்கரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
அதேசமயம் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, “ஆழப்புழா பைபாஸ் சாலையில், குறிப்பாக இந்த சிக்னலில், முறையான கைகாட்டி பலகைகள் வைக்கப்படாததால், உள்ளூர்வாசிகளே தங்களை அறியாமல் அடிக்கடி இப்படி ஒரு விதிமீறலுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி இருக்கையில் எப்போதோ ஒருமுறை இந்தப்பக்கம் வரும் துல்கர் சல்மானுக்கும் அந்த குழப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை என்று விளக்கம் கூறியுள்ளார்.




