'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு 2019ம் ஆண்டு முதல் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. விசாரணையை உச்சநீதிமன்றம் விதித்த காலகெடுவுக்குள் முடிக்கவில்லை. இதனால் தனி நீதிமன்றம் மேலும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முடிக்க தனி நீதிமன்றத்துக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இனிமேல் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறிவிட்டது.
இதுவரை 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.