'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு |
தமிழ் சினிமா கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கத்தால் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது.
50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்தார்கள். பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே கூட்டம் வந்தது. அதன்பின்பு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவற்றைப் பார்க்க பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் உள்ள பெரிய தியேட்டர்கள், பெரிய சிங்கிள் தியேட்டர்கள் பலவும் மூடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையில் முக்கிய மல்டிபிளக்ஸ் வளாகமான சத்யம் காம்ப்ளக்சில் சத்யம், சாந்தம் ஆகிய தியேட்டர்களில் கடந்த பல நாட்களாகவே காட்சிகள் நடக்கவில்லையாம். அங்குள்ள சிறிய தியேட்டர்களை மட்டுமே திறந்து வைத்துள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டுவது அரிதாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும் என்ற பெரும் கவலையில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.