இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளார்களாம். சுமார் 11,500 தியேட்டர்களில் படத்தை திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் 6500 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 3000 இடங்களில் 5000 தியேட்டர்களில் திரையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் இதற்கு முன்பு வசூல் சாதனை புரிந்த சில படங்களின் வசூலை 'புஷ்பா 2' படம் முறியடிக்கும் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள். விரைவில் இப்படத்தின் புரோமோஷன் வேலைகள் ஆரம்பமாக உள்ளதாம். இந்தியா முழுவதும் படக்குழுவினர் சுற்றுப் பயணம் செய்வார்கள் எனத் தெரிகிறது.