'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இந்தியத் திரையுலகில், இந்திய மீடியாக்களில் சமீபகாலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு திருமண செய்தியாக நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் இருந்தது. நேற்று காலையும், மாலையும் முறையே தெலுங்கு முறைப்படியும், கொடவா முறைப்படியும் அவர்களது திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நேற்று மாலையில் இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களது காதல் குறித்தும் பதிவிட்டிருந்தனர். அவர்களது பதிவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டிருந்தனர். எண்ணற்ற ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அவர்களது பதிவில் ராஷ்மிகாவின் பதிவிற்கு 14 மில்லியன் லைக்குகளும், 2,34,000 கமெண்ட்டுகளும், விஜய் தேவரகொண்டாவின் பதிவிற்கு இதுவரையில் 12 மில்லியன் லைக்குகளும், 1,80,000 பிளஸ் கமெண்ட்டுகளும் வந்துள்ளது.
புதிய படங்களின் டிரைலர்கள், டீசர்கள் வெளிவந்தால் கூட இவ்வளவு லைக்குகள் கிடைத்திருக்காது. ஆனால், அவர்களது திருமணப் பதிவு புகைப்படத்திற்கு இத்தனை மில்லியன் லைக்குகள் என்பது அவர்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.




