அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

தமிழ் சினிமாவில் சிவாஜி சாதிக்காத விஷயங்களே இல்லை. சில வெளிப்படையாக தெரியும், சில சாதனைகள் மறைந்திருக்கும். அதற்கு ஒரு உதாரணம் 1958ம் ஆண்டு சிவாஜி 8 படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இனி அதற்கான சாத்தியமும் இல்லை.
1958ம் வருடத்தின் முதல் படம் 'உத்தமபுத்திரன்'. இது நூறு நாள் ஓடியது. சில தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. அடுத்து வெளியான 'பதிபக்தி' 100 நாட்கள் ஓடிய படம். மூன்றாவதாக வெளியான 'சம்பூர்ண ராமாயணம்' ஐந்து நகரங்களில் 100 நாட்களும் மதுரையில் 165 நாட்களும் ஓடியது.
நான்காவதாக வெளிவந்த படம் 'பொம்மை கல்யாணம்' 50 நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு சில தியேட்டர்களில் 100 நாளை கடந்தது. ஐந்தாவது படம் 'அன்னையின் ஆணை'. இதுவும் 100 நாள் படம். ஆறாவதாக வெளியான 'சாரங்கதரா', ஏழாவதாக வெளியான 'சபாஷ் மீனா', எட்டாவதாக வெளியான 'காத்தவராயன்' ஆகிய படங்களும் 100 நாள் ஓடி வெற்றி பெற்றன.