நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழசரன் பச்சமுத்து இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'லப்பர் பந்து'. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதன்பின் 'மெய்யழகன், வேட்டையன்' உள்ளிட்ட படங்கள் வந்தாலும் சில பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி ஓடி ஆச்சரியப்படுத்தியது.
இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, ஹரிஷ் கல்யாண், சஞ்னா ஆகியோரை அழைத்து நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்த ஹரிஷ் கல்யாண், “இது இன்று நடந்தது.. எனது அன்புக்குரிய சிம்பு, உங்களது அன்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி, லவ் யு” என்று குறிப்பிட்டுள்ளார்.
'லப்பர் பந்து' படத்தைப் பாராட்டியதற்கு நன்றி சிம்பு சார்,” என இயக்குனர் தமிழரசன் பதிவிட்டுள்ளார்.