லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்போகும் ராஜமவுலி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நடிக்கும் மகேஷ் பாபுவை தற்போது படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாற்றி வருகிறார். அதற்காக அவருக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து முடித்து படம் திரைக்கு வரும் வரை இந்த படத்துக்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று மகேஷ் பாபுவுக்கு ராஜமவுலி ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.