ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். முதன்முறையாக இவர் நாயகியாக நடித்துள்ள படம் 'கால்ஸ்'. கால்சென்டரில் பணிபுரியும் சம்பவத்தை மையப்படுத்தி சஸ்பென்ஸ் படமாக உருவாகி உள்ளது. ஆர்.சுந்தர்ராஜன், வினோதினி, தேவதர்ஷினி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சபரீஷ் இயக்கி உள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் பிப்., 26ல் இப்படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் படம் வெளியாகும் முன்பே அவர் மறைந்தது அவரது ரசிகர்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.