பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அதன்பின் அரசியல் சுழலில் சிக்கி, சினிமாவில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் நடித்து வந்த 24ம் புலிகேசி படமும் டிராப் ஆனது. மற்றொரு படமும் வேறு ஒரு நடிகருக்கு சென்றது. இதனால் பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் மனோபாலா, கங்கை அமரன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடிவேலு உடன் இவர்கள் இருக்கும் போட்டோ சமூககவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும் மீண்டும் வாங்க வடிவேலு என கருத்து பதிவிட்டுள்ளனர்.