மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷயம்'. அப்படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 2015ல் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றது.
தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அதே குழு உருவாக்கியுள்ளது. படம் பிப்ரவரி 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் பாகக் கதையின் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
முதல் பாகத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தது போல இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்வாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் ஏற்கெனவே ஆரம்பித்த 'இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கிறான்' ஆகிய படங்களை முடித்தாக வேண்டும். அதற்குப் பிறகே அவர் 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அப்படியே இரண்டாம் பாகம் உருவானாலும் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள். எனவே, வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும். அப்படி நடிக்க வைத்தால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, 'பாபாநாசம் 2' படம் உருவாக வாப்பில்லை என்றே தோன்றுகிறது.