டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு ஆந்தாலஜி படமாவது வந்துவிடுகிறது. சில குறும்படங்களின் தொகுப்புதான் இந்த ஆந்தாலஜி. 'எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள ஆந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' நாளை மறுநாள் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளதாக ஏற்கெனவே அறிவித்து, டிரைலரையும் வெளியிட்டார்கள். ஆனால், டிரைலரில் கூட யார், யார் எந்தப் படத்தை இயக்கியுள்ளார்கள், யார், யார் நடித்துள்ளார்கள் என்ற தகவலை வெளியிடவில்லை.
அவற்றை நேற்று தான் அறிவித்தார்கள். 'குட்டி ஸ்டோரி' படத்தில் உள்ள நான்கு ஸ்டோரிக்களின் தலைப்பும், அதை இயக்கியவர்கள், நடித்துள்ளவர்களின் விவரம்...
எதிர்பாரா முத்தம்
இயக்கம் - கௌதம் மேனன்
இசை - கார்த்திக்
நடிப்பு - கௌதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர்
அவனும் நானும்
இயக்கம் - விஜய்
இசை - மது
நடிப்பு - அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ்
லோகம்
இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால், லுத்புதீன்
ஆடல் பாடல்
இயக்கம் - நலன் குமாரசாமி
இசை - எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு - விஜய் சேதுபதி, அதிதி பாலன்
நான்கு குட்டி ஸ்டோரிகளும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.