தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இன்று திடீரென இப்படத்தின் சில புகைப்படங்களையும், கங்கனா நடித்து வரும் ஹிந்திப் படமான 'தாக்கட்' படத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து ஒரு சவால் விடுத்துள்ளார். டுவிட்டரில் அந்த சவாலை அவர் பகிர்ந்துள்ளார்.
“இது உருமாற்றத்திற்கான எச்சரிக்கை... இந்த உலகத்தில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு மாற்றத்தைக் காண்பித்ததில்லை. மெரில் ஸ்ட்ரிப் போல அடுக்கடுக்கான கதாபாத்திரத் திறமை என்னிடம் உள்ளது. அதே போல கேல் கடாட் போல் என்னாலும் ஆக்ஷனாகவும், கிளாமராகவும் நடிக்க முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் என்னைத் தவிர வேறு யாராவது இந்த அளவிற்கு கலைத் திறமை காட்ட முடியுமா என வெளிப்படையாக சவால் விடுக்கிறேன். அப்போது என்னுடைய ஆணவத்தை நான் கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்குத்தான்,” என சவால் விடுத்துள்ளார் கங்கனா.




