சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தமிழ் சினிமாவில் சில முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் நடித்த படங்கள் கூட சில வருடங்களாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. அந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்பது அந்தப் படங்களை உருவாக்கியவர்களுக்கே தெரியுமா, தெரியாதா என்பதும் சந்தேகம்தான்.
செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் முடிந்து சில வருடங்கள் ஆகியும் வெளிவராமலே இருந்தது. அந்தப் படம் தற்போது மார்ச் 5 வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
அந்தப் படத்திற்குக் கிடைத்த விடிவு காலம் முடிந்து சில வருடங்களாக வெளிவராமல் உள்ள மற்ற படங்களுக்கும் கிடைக்குமா என அப்படங்களின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்', விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள 'இடம் பெருள் ஏவல்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள 'நரகாசூரன்', எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'இறவாக்காலம்', வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி', விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்', ஆகிய படங்கள் இந்த வருடமாவது வெளிவந்துவிடுமா என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டும்.
சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு வரப்பிரசாதமாக ஓடிடி வந்துள்ளன. ஆனால், அவற்றில் கூட அப்படங்களை வெளியிட முடியாத அளவிற்கு பிரச்சினைகள் உள்ளது போலிருக்கிறது.